"அதோ முல்லா வருகிறார்" என்று தேனீர்க்கடையில் கடுமையான தத்துவ விவாதம் நடந்து கொண்டிருந்தபோது ஒருவர் கூவினார்.
"அவரிடம் ஓர் கடினமான கேள்வியைக் கேட்போம்" என்றார் ஒருவர்.
"ஆனால் அவருக்குக் கழுதைகளை விட்டால் வேறு எதுவும் தெரியாது" என்றார் மற்றொருவர்.
"கழுதைக்கும் தத்துவமுண்டு" என்று தான் காதில் கேட்ட வார்த்தைகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே நுழைந்தார் முல்லா.
"எல்லாம் சரிதான், நஸ்ருத்தீன்" என்று பேச்சை ஆரம்பித்த ரொட்டி சுடுபவர், "இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும். எது முதலில் வந்தது, கழுதைகளா அல்லது பொதி மூட்டைகளா?" என்றார்அவர்.
"ரொம்பச் சுலபம். பொதி மூட்டைகள்" என்று எந்தவித தயக்கமுமில்லாமல் சொன்னார் முல்லா.
"நகைப்பிற்கிடமான பதில்!"
"நிரூபியுங்கள்! முல்லா" என்று இன்னொரு குரல் கேட்டது.
"நல்லது.. ஒரு கழுதையால் ஒரு பொதி மூட்டையை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனால் பொதி மூட்டையால் ஒரு கழுதையை அடையாளம் கண்டுகொள்ள முடியாது."
"ஒரு கழுதையைத் தன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது என்று ஒரு பொதிமூட்டை கொடுத்த உறுதிமொழி உங்களிடம் இருக்கும் என நினைக்கிறேன்?" என்றார் முல்லா.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.