மலச்சிக்கல்
ஒரு பெரும் சிக்கல் மலச்சிக்கல் இருந்தாலே நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க
முடியாது. தினசரி இரண்டு நேரம் ப்ரியாக மலம் கழிக்க வேண்டும். அவ்வாறு சரியாக மலம் கழிக்க வில்லை என்றாலே உடம்பில் ஏதாவது நோய் வந்து தொற்றிவிடும்.
சரி இப்பொழுது மலச்சிக்கலை எப்படி போக்குவது நாம் இதற்காக மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை. அதை எப்படி நாமே சரி பண்ணுவது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
நமது
உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நல்ல உழைப்பும் பசியும்
மற்றும் செரிமானமும்
இருக்க வேண்டும். நீங்கள் ‘கழிவறைக்கு’ நாள்தோறும்
இரண்டு முறை சென்று நிம்மதியுடன் திரும்புபவராயிருந்தால் நீங்கள்
அதிர்ஷ்டசாலிதான் அல்லது கழிவறையில் வெகு நேரம் காலம் கழிப்பவராக
இருந்தால் நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்.
வெது
வெதுப்பான டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி நெய் கலந்து படுக்கைக்குப் போகும் முன்னர்
அருந்துவது மலச்சிக்கல் பிரச்னை தீர உதவும்.
அதேபோல, காலை
நடை பயிற்சிக்கு முன்னர் 2-3 டம்ளர்
வெது வெதுப்பான நீரை அருந்துவதும் சிறந்தது.
நாள்தோறும்
8-10 டம்ளர்கள்
தண்ணீர் காலையில் வெறும் வயிற்றுடன் அருந்துவது நல்லது என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள். ஒரு டம்ளர் குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து ஒரு சிட்டிகை அளவு
உப்பு கலந்து குடிப்பது எப்பேர்பட்ட மலச்சிக்கலையும் நீக்கிவிடும் என்கிறார்கள்.
பழவகைகள்
மற்றும் காய்கறிகள்
அதிலும் குறிப்பாக பப்பாளி, கொய்யா
போன்றவற்றை உணவாக்கிக் கொள்வதும் நல்லது. தக்காளி, பீட்ரூட்
துண்டுகள் மலச்சிக்கல் நீக்க பெரிதும் உதவும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
அல்லது தினந்தோறும்
இரவு நாட்டு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. இவை
எல்லாமே இயற்கை சார்ந்த எளிய மருத்துவமுறைகள். ஆதலால் பக்கவிளைவுகள் ஏதும்
ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இவற்றை நாள்தோறும்
கடைபிடித்தால் மலச்சிக்கல் நம்மை விட்டு விலகிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.