மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து ஆப் ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம்.
அதற்கு மீண்டும் சார்ஜ் செய்ய மின் வசதி இருக்கும் இடத்தை தேடி ஓடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கையில் பிடித்தபடியே சார்ஜ் செய்ய முடியும்.
அதற்கான புதிய தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நானோ டெக்னாலஜி பேராசிரியர் டேவிட் கரோல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய கார்பன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : மாலைமலர்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.