முல்லாவின் நண்பர் ஒருவர் கேட்டார், ''நீங்கள் தூங்கி எழுந்ததும், நீங்கள்
ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி விட்டீர்கள் என்று தகவல் வந்தால் என்ன
செய்வீர்கள்? ஒருவர் சொன்னார், ''நான் பெரிய பங்களாவை விலை
பேசுவேன்,
''என்றார். இன்னொருவர், ''இந்தப் பணத்தைக் கொண்டு எப்படியெல்லாம்
மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று விபரம் சேகரிப்பேன்.'' முல்லா
சொன்னார், ''நான் மறுபடியும் தூங்கப் போவேன்,'' கேள்வி கேட்டவருக்கு ஒன்றும்
புரியவில்லை. முல்லா விளக்கினார், ''நான் மறுபடியும் தூங்கி எழுந்தால்
இன்னொரு கோடி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது அல்லவா?''முல்லா கோபத்துடன் ஒரு பெரியவரைப் பார்த்து, ''நீ நரகத்துக்குப் போ, ''என்று கத்தினார். அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அந்தப் பெரியவர் அவ்வளவு நல்லவர். உடனே எல்லோரும் ஒன்று கூடி முல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர். முல்லாவும் வேறு வழியின்றி போகவே பெரியவரைப் பார்த்து சொன்னார், ''நீங்கள் நரகத்துக்குப் போக வேண்டாம்.''
முல்லா மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில் சேர்க்கப்
பட்டிருந்தார். சில நாள் கழித்து அவரைப் பார்க்க வந்த நண்பர்
சொன்னார்,' 'நான் டாக்டரிடம் பேசினேன். நீங்கள் குணமாகி வருவதாகவும், விரைவில்
வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் சொன்னார்,''முல்லா கோபத்துடன்
சொன்னார், ''இவ்வளவு வசதியான இடத்தை விட்டு விட்டு, பேய் போலக் கத்தும் என்
மனைவி இருக்கும் வீட்டிற்குத் திரும்பச் செல்ல எனக்கு என்ன பைத்தியமா
பிடித்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.