காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!
சென்னை: இலங்கையை ஓட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால்
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரியை ஓட்டி நிலைக் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இலங்கையை ஓட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணிநேரத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
நன்றி
Fade Book அறிந்துகொள்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.