நாம் சாப்பிடும்
உணவு
வகைகளே நமக்கு சில நேரங்களில்
ஆபத்தை ஏற்படுத்தி விடும். உணவு கெட்டு போய் விட்டால் அது விஷமாகி நமது உடலை பதம் பார்க்கத்துவங்கி
விடும் கெட்டுபோன உணவை சாப்பிடுவதால்
உடனடியாக ஆபத்து ஏற்படாவிட்டாலும்
உடலில் பல கோளாறுகளை ஏற்படுத்தி
விடும்.
தலை சுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு,
என்று
பல
உபாதைகளால் துடிக்க வேண்டியிருக்கும்.
சைவ
உணவாக
இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும்
சரி
அது
சரியாக சமைக்கப்படாவிட்டால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் சாகாமல் நம் வயிற்றுக்குள் போய் தன் வேலையை காட்டத்துவங்கி விடும். இதில் இருந்து எப்படி தப்புவது? இதோ சில சுலபமான டிப்ஸ்கள்:
தண்ணீர் அதிகம் குடியுங்கள்: பாக்டீரியாக்கள் குடலில் தங்கி இருந்து தொல்லை கொடுப்பதால் அதிக அளவு தண்ணீர் சத்து வீணாகி விடும். உடலில் தண்ணீர் சத்து இல்லாமல் போவதை தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழ ஜூஸ்களும் சிறந்ததுதான் எனினும் எதையும் வேகமாக குடிக்க கூடாது. அப்படி குடித்தால் வாந்தி வந்து விடும். வாந்தி மற்றும் வயிற்று போக்கால் அதிக தண்ணீர் வெளியே போய் விடுவதால் பொட்டாசியம், சோடியம், குளுகோஸ் சாத்து அதிகம் வெளியேறி விடும். அதனை சரிசெய்ய மருந்து கடைகளில் கிடைக்கும் எலக்ரோலைட் வாங்கி குடிக்கலாம். அல்லது பழ ஜூஸ்களில் அரை டீஸ்பூன் தேன், கொஞ்சம் உப்பு கலந்து குடிக்கலாம்.
அன்டாசிட் வேண்டாம்: வயிற்றில் வாயு தொல்லைக்கு பயன்படுத்தும் அன்டாசிட் மாத்திரைகளை இந்த சமயத்தில் பயன்படுத்தக் கூடாது. இதனால் வயிற்றில் பாக்டீரியா எதிர்ப்பு குறைந்து விடும்.
என்ன மருந்து? வாயிற்று போக்கிற்கு உடனடியாக மாத்திரை மருந்து சாப்பிடாதீர்கள், உடலில் வேண்டாததுதான் வெளியேறும். மாத்திரை சாப்பிட்டு அதனை நிறுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எனவே கண்டிப்பாக மருந்து உட்கொள்ள வேண்டும் என்றால் டாக்டரை கன்சல்ட் செயுங்கள்.
சாதாரண உணவு போதும்: வயிற்றுப் போக்கு, வாந்தி எடுத்தல் நின்று சில மணி நேரங்களுக்குப்பின்னர் மீண்டும் உங்களுக்கு பசி எடுக்கும். உடனே அதிக கடினமான உணவை சாப்பிட துவங்கி விடாதீர்கள். சுலபமாக செரிக்க கூடிய உணவு வகைகள் தான் சிறந்தது. காரணம் உங்கள் குடல் பகுதிகள் மிகவும் பலவீனமடைந்து இருக்கும். அதிக மசாலா கலந்த உணவு வகைகள், பால் பொருட்களை தவிப்பது நல்லது. ஓரிரு நாட்கள் இப்படி சாதாரண உணவு சாப்பிட்டால் போதும். அதன் பின் எல்லாவற்றையும் சாப்பிட உடல் தயாராகி விடும்.
தவிர்ப்பது எப்படி? உணவு வகைகளை சமைக்கத்துவங்கும் முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கைகளில் ஒட்டியிருக்கும் பாக்டீரியாக்கள் உணவில் கலக்காது. மீன், மாமிசம், பால், முட்டை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சாப்பிட கூடாது. பச்சை உணவு பொருட்களை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அல்லது நன்றாக குளிர வைக்க வேண்டும். பாக்டீரியாக்கள் 150 டிகிரி வெப்பத்திலும் 40 டிகிரிக்கு குறைவான குளிரிலும் வளராது. சமைத்து நீண்ட நேரம் ஆன உணவு வகைகளை சாப்பிட கூடாது.
அவசர சிகிச்சை: கெட்டுப்போன உணவு வகைகளை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் விழுங்க முடியாமலோ, பேச முடியாமலோ, மூச்சு விட திணரினாலோ, பார்வை குறைபாடு ஏற்பட்டாலோ, உடல் வலி ஏற்பட்டாலோ உடனே டாக்டரை சந்திக்க வேண்டும். 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், எதையும் சாப்பிடமுடியாமல் வாந்தி எடுத்தல், இரண்டு நாட்களுக்குப் பின்னரும் தொடர்ந்து வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, ரத்த போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.