நாம் கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட வில்லை என்றால் நமக்கு கம்ப்யூட்டர் இயக்கும் ஆர்வமே குறைந்து விடும்.
பொதுவாக ஆபீசில் உள்ள கம்ப்யூட்டராக இருந்தலும் சரி வீட்டில் உள்ள கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி நாளாக நாளாக அதன் வேகம் குறைந்து கொண்டே போகிறது.
இதற்கு தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிக்க வேண்டும். அழித்த பிறகும் கம்ப்யூட்டர் வேகம் குறைவதாக இல்லை என்றால் நாமே சின்ன சின்ன முயற்சிகள் செய்து கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அமுக்கி ----> அதில் ஃப்ரோக்ராம் பட்டனை அமுக்க வேண்டும். அதன் பின் அக்ஸசரிஸ் பட்டனை அழுத்தி ----> சிஸ்டம் டூல்ஸ் பட்டனை கிளிக் செய்தால் டிஸ்க் கிளீன் அப் மற்றும் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கபட்டிருக்கும். இந்த ஆப்ஷனில் கிளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு விடும்.
இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் டீஃப்ரேக்மென்ட் செய்வதை பாருங்கள். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைபடுத்தலாம்.
பயன் படத்தப் படாத ஃபைல்கள் சேர்ந்து கொண்டே போகும் போது கூட வேகம் குறைய ஆரம்பிக்கும்.ஆகவே வாரம் ஒரு முறை டிஸ்க் கிளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது நல்லது. மேலும் கம்ப்யூட்டர்வேகம் குறையாமலும் இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.