முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ATM / CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கவனத்திற்கு! ! ! !
ATM / CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கவனத்திற்கு! ! ! !
ATM/CREDIT கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவோர் கீழுள்ள குறிப்புக் களை
மிகுந்த கவனமுடன் படித்து அதன்படி கடைபிடித்தால், பின்னாளில் வரும்
பாதிப்புக் களிலிருந்து நீங்கள் கொஞ்ச மாவது தப்பிக்கலாம்.
ATM கார்டில் அதற்குரிய இடத்தில் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும்.
கார்டு எண்ணை பாதுகாப்பாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் வாடிக்கையாளராக உள்ள வங்கியின் தொலைபேசி எண் மற்றும் எமர்ஜென்சி தொலைபேசி எண்ணைகட்டாயம் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
கார்டோடு பின் நம்பரை எழுதி வைக்காதீர்கள்.
கார்டை பணம் எடுப்பதற்காக பிள்ளைகளிடம் கொடுத்தனுப்பாதீர்கள். கைபேசி,
கணினி, போன்ற வற்றை கையாள்வதில் பிள்ளை கள் திறமைசாலிகள் என்பதில்
ஐயமில்லை.
வங்கிக் கணக்கு எண், வங்கியில் கொடுத்துள்ள வசிப்பிட முகவரி போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ATMஇல் பணம் எடுக்கப்பட்டால் கைபேசியில் குறுஞ்செய்தி வரும் வசதியை கட்டாயம் பயன் படுத்துங்கள்
கடைகளில் கார்டை பயன்படுத் தும்போது உடனிருந்து கவனியுங்கள்
கொடுக்கப்படும் ரசீதுகளை பத்தி ரமாக வைத்திருந்து PASS BOOK என்ட்ரி போட்டு சரி பார்க்கவும்.
உங்கள் ATM கார்டு , கிரெடிட் கார்டு எங்களை தொலைபேசியில்யாரிடமும்
சொல்லாதீர்கள். இணையத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் இவற்றை
தெரிவிக்காதீர்கள்.
கார்டுகளை இருபுறமும் ஜெராக்ஸ் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது வெளியில் யார் கைக்கும் கிடைத்து விடக் கூடாது.
ATM/Credit Card விவரங்களை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் உங்கள் வீட்டில் கூட வைக்காதீர்கள்.
அவ்வப்போது பின் நம்பர்களை மாற்றி விடுங்கள்
ATM கவுண்டர்களில் முன்பின் தெரியாதவர்களின் உதவியைநாடா தீர்கள்
கார்டு தொலைந்து விட்டால் வேலை நேர மாக இருந்தால் வங்கிக்கு நேரிலோ அல்லது தொலை பெசியிலோ உடனடியாக தெரிவித்து விடுங்கள்
மற்ற நேரங்களில் தொலைந்து விட்டால் ஒவ்வொரு வங்கிக்கும் அவசர உதவிக்காக
Toll Free தொலைபேசி என்மூலம் தொடர்பு கொண்டு கார்டை ப்ளாக் செய்யலாம்.
இதற்கு சற்று பொறுமை அவசியம்.
Thanks: facebook அறிந்துகொள்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.