மிதுனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை மிருகசீரிடம் 3,4 பாதம் , திருவாதிரை 4 பாதம் முடிய , புனர்பூசம் 1, 2,3 பாதம் வரை . பலன்கள் மதிப்பு 60%
சனி பகவான் மிதுன ராசிக்கு 8க்கும் 9க்கும் உரியவர் . யோகக்காரர் .அவர் கடந்த காலம் முழுவதும் 5ம் இடத்தில் உச்சம் பெற்று , 8ம் இடபலனையும் சேர்த்து கொடுத்திருப்பார் . 5ம் இடம் சிறந்த இடமில்லை என்றாலும் , 9ம் இடத்து அதிபதி சனி பகவான் 5ல் லிருந்து கடந்த இரண்டரை வருடம் , நல்ல பலனும் கொடுத்திருப்பார் , கெட்ட பலனும் கொடுத்திருப்பார் . ஆனாலும் கடந்த காலம் சனி பகவானால் நன்மை அடைந்திருபிர்கள் . சனி பகவான் தற்போது ராசிக்கு 6ம் உபஜய ஸ்தானத்தில் சஞ்சரிக்கபோகிறார் . இது சனி பகவானின் பகை வீடு .இந்த நீர் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது மிதுன ராசிக்காரகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும் . சொந்த தொழில் செய்பவர்கள் நன்மை அடைவார்கள் . 10ம் இடத்துக்கு 9ம் இடத்தில சனி பகவான் சஞ்சரிப்பதால் சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள் . இந்த இரண்டரை ஆண்டு நல்ல பலன்கள் , அதிகமாகவும் , கெடுபலன்கள் குறைவாகவும் நடக்கும் .
சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் கொடுக்க மாட்டார் . இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் நஷ்டமடையும் . உடல் நலம் பாதிக்க படும் . 7ம் இடத்துக்கு 12ம் இடத்தில சஞ்சரிக்கும் மனைவியால் மருத்துவ செலவு உண்டு .
சனி பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் . 10 ம் இடத்துக்கு 9ம் இடத்தில் , குரு பகவான் பார்வை வேறு , அதனால் சொந்த தொழில் செய்பவர்கள் , தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் . அலுவலகத்தில் பணி புரிபவர்கள் , எதிர் பாராவிதமாக பதவி கிடைக்கும் . 9ம் இடத்துக்கு 12ம் இடம் , ராசிக்கு 8ம் இடம் , 8ம் இட அதிபதிக்கு பாதகதிபதியும் , கர்மஸ்தனதிபதி குரு பகவான் பார்வை சனிக்கு , இதனால் தந்தை பாதிக்கபடுவார் . மருத்துவ செலவு ஏற்படும் . மேலும் குழந்தைகள் உடல் நிலை பாதிக்கும் .
சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை சனி பகவான் கொடுப்பார் . குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் .சனி திசை நடந்தால் அமோகமான பலன்கள் கிடைக்கும் மிதுன ராசிக்கு
பரிகாரம்
அனுஷம் , உத்திரட்டாதி , பூசம் , இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் , விரதமிருந்து தீபம் ஏற்றிவந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் ,
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உபயோகிங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.