கடகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . புனர் பூசம் 4 ம் பாதம் , பூசம் 4 பாதம் முடிய , ஆயில்யம் 4 பாதம் முடிய பலன்கள் மதிப்பு 40 %
சனி பெயர்ச்சி கடக ராசிக்கு சுமாரான பலன்களே கொடுப்பார் . கடந்த இரண்டரை வருடம் அர்த்தஷ்டமா சனி , படாதபாடு படுத்திருப்பார் . அனால் இந்த இரண்டரை வருடம் அந்த கஷ்டங்கள் இனி இல்லை . 16.12.2014 அன்று சனி பகவான் பெயர்ச்சி ஆகி உங்கள் ராசிக்கு 5ம் இடத்துக்கு வருகிறார் . இந்த இடம் சனி பகவானுக்கு உகந்த இடம் இல்லை . கடக ராசிக்கு சனி பகவான் பகை பெற்றவர் . 7ம் இடம் மற்றும் 8ம் இடம் இடத்துக்கு உரியவர் . 5ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும்போழுது , குழந்தைகளுக்கு ஆகாது . பிள்ளைகளுடன் சண்டை சச்சரவு ஏற்படும் . மேலும் பூர்வீக இடங்களால் , வழக்கு ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல நேரிடும் . வேலை யில் உள்ளவர்கள் இடம் மாறுவார்கள் . சொந்த தொழில் செய்பவர்கள் வேறு தொழில் செய்ய வழி வகுக்கும் .
சனி பகவான் ""விசாகம் "" நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போழுது, வம்பு , வழக்கு , தந்தைக்கு மருத்துவ செலவு போன்றவைகள் நிகழும் . இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் படிப்பு மந்த நிலை ஏற்படும் . 10ம் இடத்துக்கு 8ம் இடம் 5ம் இடம் . இதனால் சொந்த தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடைவார்கள் .
சனி பகவான் "'அனுஷம் "" நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு உண்டாகும் . இந்த கால கட்டத்தில் பூர்விக இடத்தால் பிரச்சனை ஏற்படும் . மனைவி வழியில் திடீர் பணவரவு ஏற்படும் . 2015 ஜூன் மாதம் வரை சனி பகவானை குரு பகவான் 5ம் பார்வையால் பார்ப்பதால் 6 மாதம் வரை எந்த கஷ்டமும் வராது .
சனி பகவான் ""கேட்டை " நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழு குடும்பத்தில் விரய செலவு ஏற்படும் . சனி பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தை தன் 10ம் பார்வையால் பார்ப்பதால் வருமானம் தடைபடும் .10ம் இடத்துக்கு 2ம் இடத்தை சனி பகவான் தன் 7ம் பார்வையால் பார்ப்பதால் , சொந்த தொழில் செய்பவர்கள் நஷ்டம் அடைவார்கள் . 7ம் இடத்தை சனி பகவான் தன் 3ம் பார்வையால் பார்ப்பதால் மனைவிக்கு மருத்துவ செலவு ஏற்படும் .
கடக ராசிக்காரர்கள் , 1 வருடம் சனி பகவானின் இன்னல்களை அனுபவித்து ஆகவேண்டும் . மீதி ஒன்றரை வருடம் குரு பகவானின் அருளால் கஷ்டங்கள் குறையும் .
பரிகாரம்
சனி கிழமை தோறும் , நல்லெண்ணெய் ஏற்றி வழி பட்டால் கஷ்டங்கள் குறையும் .
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உபயோகிங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.