சிம்மம்

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . மகம் 4 பாதம் முடிய . பூரம் 4 பாதம் முடிய , உத்திரம் 1ம் பாதம் வரை . பலன்கள் மதிப்பு 30%



சனி  பெயர்ச்சி பலன்கள்  முழுவதும்  சந்திரனை  அடிப்படையாக  வைத்து  கணிக்கப்பட்டது . இது  பொது  பலன்களே !!!!!!


சனி  பகவான்  சிம்ம  ராசிக்கு  பகை  பெற்றவர் . அவர்  ராசிக்கு  6க்கும் , 7க்கும்  உடையவர் . சிம்ம  ராசி ஸ்திர ராசி .  ஸ்திர  ராசிக்கு  3ம் இடம்  மற்றும்  8ம் இடம்  மாரக ஸ்தானம் . இந்த இடத்தில்  இருக்க  கூடிய கிரகங்கள் , மற்றும்  கோச்சாரத்தில்  இந்த இடத்தில்  வரும் கிரந்கங்கள்  நன்மைகள்  செய்யாது . கடந்த  காலம்  முழுவதும்  சனி பகவான்  3ம் இடத்தில் இருந்து  நன்மைகள்  குறைவே ! இப்போது   சனி பகவான்  4ம்  இடத்துக்கு  வருகிறார் . இந்த  இடம்  சனி பகவானுக்கு  உகந்த இடம்  இல்லை . இதை  அர்தாஷ்டம  சனி என்று  சொல்வார்கள் . இதனால்  கெடு பலன்களே  நடக்கும்  . சனி பகவான்  4ம் இடத்தில் சஞ்சரிக்கும்போழுது , இதயம்  சம்பந்தமான  நோய்  ஏற்பட  வாய்ப்பு  உள்ளது. மேலும்  வண்டி  , வாகனங்களால்  விபத்து  ஏற்பட  வாய்ப்பு  உள்ளது . இடம் சம்பந்தமான  பிரச்சனைகள்  வரும் . தாய்க்கு   உடல் நிலை  பாதிக்கும் . பிள்ளைகளால்  விரயம்  ஏற்படும் . சொந்த   தொழில்  செய்பவர்கள்  பாதிப்பு  அடைவார்கள் .



சனி பகவான்   குரு பகவான்  நட்சத்திரமான  விசாகத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது , பிள்ளைகளால்  மருத்துவ  செலவு  ஏற்படும் . மேலும்  சிலருக்கு  அவமானம்  ஏற்பட வாய்ப்பு  உண்டு . பூர்விக  இடத்தால்  பிரச்சனைகள்  உண்டாகும் .



சனி பகவான்  தன  சொந்த நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  மனைவியால்  சில பிரச்சனைகள்  உண்டாகும்  . சின்ன ,சின்ன  , கருத்து  வேறுபாடு  உண்டாகும் . மேலும்  இருக்கும்  இடத்தை  விட்டு  வேறு இடத்துக்கு  மாற்றம்  கொடுக்கும் .சனி பகவான்  7ம்  பார்வையால்  தொழில் ஸ்தானமான  10ம்  இடத்தை  பார்ப்பதால் , தொழில்  சம்பந்தமான  பிரச்சனை ஏற்படும் . வேலை  செய்பவர்கள்  பதவி பறிபோகும்  நிலைமை  உண்டாகும் .



சனி  பகவான்   புதன்  நட்சத்திரமான  கேட்டையில்  சஞ்சரிக்கும்  பொழுது  பணத்தட்டுப்பாடு  வரும் . இதனால்  கடன்வாங்கும்  நிலை  ஏற்படும் .



மொத்தத்தில்  இந்த  சனி பெயர்ச்சி  சிம்ம  ராசிக்கு  நல்ல  பலன்கள்  இல்லை . தினமும்   கோவிலுக்கு  செல்வது  சிறப்பு 



பரிகாரம் 



சனி பகவானின்  நட்சத்திரமான  , அனுஷம் , பூசம் , உத்திரட்டாதி , மற்றும்  சனிகிழமை ,  ஆஞ்சிநேயர்  கோவிலுக்கு  சென்று   தீபம்  ஏற்றி  வழிபட்டால்  துன்பங்கள்  அகலும் .



குறிப்பு  



தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள் 

கருத்துகள்