ரிஷபம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை கிருத்திகை 2,3,4 பாதம், ரோஹிணி 4 பாதம் முடிய , மிருகசீரிடம் 1,2 வரை பலன்கள் மதிப்பு 40%
ரிஷப ராசிக்கு சனி பகவான் 9க்கும் , 10க்கும் , உடையவர் . இவரே ரிஷப ராசிக்கு பாதகதிபதி , மற்றும் தர்மகர்மாதிபதியும் ஆவார். ரிஷப ராசி ஸ்திர ராசி . ஸ்திர ராசிக்கு 9ம் இடம் பாதகஸ்தானம் என்ற முறையில் பாதகத்தையும் கொடுப்பார் சனிபகவான் . கடந்த காலம் முழுவதும் 6ம் இடத்தில உச்சம் பெற்று ஓரளவு நல்ல பலன்களை வழங்கினார் . ஆனால் இந்த சனி பெயர்ச்சி ராசிக்கு 7ம் இடத்தில் , அதனால் நல்ல பலன்கள் ரிஷப ராசிக்கு குறைவாகவே கிடைக்கும் . ஏனென்றால் 7ம் இடம் என்பது மாரக ஸ்தானம் . அதனால் நல்ல பலன்கள் குறையும் .
சனி பகவான் விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் நடக்காது . குரு பகவான் பார்வை வேறு ! இதனால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும் ,இதனால் மருத்துவ செலவு ஏற்படும் . மூத்த சகோதர , சகோதரியால் உதவி கிடைக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலில் கடன் ஏற்படும் .குடும்பத்தில் பணப்புழக்கம் குறைவாகவே காணப்படும் .குரு பகவான் ரிஷப ராசிக்கு 8க்கும் , 11க்கும் உடையவர் . இவர் கடகத்திலிருந்து மாறினால் ரிஷப ராசிக்கு நன்மை நடக்கும் . சனி பகவான் 3ம் பார்வையால் 9ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் .
சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை கொடுப்பார் . 9ம் இடத்துக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்யும் தொழிலில் லாபம் வரும் . தந்தையால் லாபம் உண்டு . எதிர்பாரநிலையால் பணம் வரும் . 10க்கு 10ம் இடம் என்ற முறையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உகந்த காலம் . இந்த நேரத்தில் சென்றால் நன்றாக சம்பாரிக்கலாம் . மேலும் 4ம் இடத்துக்கு சனி பகவான் 4ல் கேந்திரம் பெற்று உள்ளத்தால் தாய்க்கு மருத்துவ செலவு ஏற்படும் . மனைவிக்கு ஜென்ம சனி என்பதால் , கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிடும் .
சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது குழந்தைகளுக்கு உடல் நிலை பாதிக்க படும் . இதனால் செலவு கட்டுக்கு அடங்காமல் செல்லும் . இந்த காலகட்டத்தில் சொந்த தொழில் செய்பவர்கள் பாதிக்க படுவார்கள் . சனி பகவான் 10ம் பார்வையால் 4ம் இடத்தை பார்ப்பதால் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு மாற்றம் கொடுக்கும் .
இந்த சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு சுமாராக இருந்தாலும் , தர்மகர்மாதிபதி என்ற முறையில் , சனி பகவான் உங்களை காபாற்றுவார்.
பரிகாரம்
எல்லா சனிக்கிழமையும் , சனி பகவான் சன்னதியுலும் , காலபைரவர் சன்னதியுலும் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்
நல்ல எண்ணெய் தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்ல எண்ணெய் யாக இருக்கவேண்டும் . " இதயம் நல்லெண்ணெய் வாங்கி தீபம் ஏற்றவும் "

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.