கன்னி

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . உத்திரம் 2,3,4, பாதம் வரை , ஹஸ்தம் 4 பாதம் முடிய , சித்திரை 1,2 , வரை . பலன்கள் மதிப்பு 70%



சனி பகவான்  கன்னி ராசிக்கு   யோகக்காரர் ! அவர்  ராசிக்கு  5ம்  இடம் மற்றும்  6ம் இடத்துக்கு  உரியவர் .நல்லது  70 %செய்தாலும் , 30% கெட்ட  பலனையும்  கொடுப்பார் . ஏனென்றால்  ராசிக்கு  6ம் இடம்  ஆதிபத்தியம் பெற்றதனால்  கெட்ட பலனும்  கொடுக்க வேண்டும்  என்பது விதி . இந்த  சனி பெயர்ச்சி  ஏழரை  சனி விடும் காலம் . இனி கன்னி  ராசிக்கு  பொற்காலம் .சனி பகவான்  ராசிக்கு  3ம் இடத்துக்கு  வருகிறார் , இதனால்  திருமணம்  ஆகாத  கன்னி ராசி  காரர்களுக்கு  திருமணம்  வாய்ப்பு கைகூடும் .  3ம்  பார்வையால்  5ம் இடத்தை  பார்ப்பதால்  பூர்வீக  சொத்துக்கள்  வந்து சேரும் .நீதிமன்றத்தில்  வழக்கு இருந்தால்  தங்களுக்கு  சாதகமாக  தீர்ப்பு  வரும் .


சனி  பகவான்   பெயர்ச்சி  ஆகி  ஒரு மாத  காலம்  விசாகம் நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பார் .இந்த  ஒருமாதகாலம்  நல்ல பலன்கள்  நடக்க  வாய்ப்பு இல்லை . ஏனென்றால்  கன்னி ராசிக்கு  பாதகாதிபதி  குரு, அதனால்  பாதகாதிபதி  நட்சத்திரத்தில்  சனி பகவான்  சஞ்சரிக்கும் போது  மனைவி இடம்  கருத்து வேறுபாடு  வரும் , சண்டை சச்சரவு  ஏற்படும் .


சனி  பகவான்  தன  சொந்த  நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும்போழுது  நல்ல  பலன்களை  வாரி வழங்குவார் . செய்யும் தொழிலில்  மேன்மை அடையும் . கடன் பிரச்சனைகள்  ஒரு முடிவுக்கு  வரும் .திருமணம் கைகூடும் .சுப நிகழ்சிகள்  நடக்கும் .படிக்கும் மாணவர்களுக்கு  வெளி நாடு சென்று படிக்க  வாய்ப்பு கிடைக்கும் .


சனி பகவான்  புதன்னின்  நட்சத்திரமான  கேட்டையில்  சஞ்சரிக்கும் பொழுது , சொந்த தொழில் செய்பவர்கள்  நல்ல லாபம் அடைவார்கள் . வேலை கிடைக்காதவர்களுக்கு  நல்ல வேலை கிடைக்கும் . வெளி நாடு  வேலைக்கு  முயற்சி செய்பவர்களுக்கு  நல்ல வாய்ப்பு கிடைக்கும் .


மொத்தத்தில்  இந்த  சனி பெயர்ச்சி  கன்னி  ராசிக்காரர்களுக்கு , கடந்த  ஏழரை  வருடதில்  இழந்ததை  மீட்டுவிடலாம் . இருந்தாலும் , அவ்வபோது சிறு தடங்கல்  ஏற்படும் . இதனால்  நல்ல பலன்களுக்கு  எந்த பாதிப்பும்  ஏற்படாது !


பரிகாரம்  


திருநள்ளாறு  சென்று  சனி பகவானை  தரிக்கவும் .


குறிப்பு  


தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள் 

கருத்துகள்