துலாம்

சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . சித்திரை 3, 4, பாதம் முடிய , சுவாதி 4 பாதம் வரை , விசாகம் 1,2,3, பாதம் வரை . பலன்கள் மதிப்பு 40%


சனி  பகவான்  துலாம்  ராசிக்கு  யோகக்காரர் ! அவர்  4ம் இடம்  , மற்றும் 5ம் இடத்துக்கு  உரியவர் . இவர்  துலாம் ராசி , லக்கினத்தை  சேர்ந்தவர்களுக்கு  நல்லபலன்களை  கொடுப்பார் . ஆனால்  கடந்த  5வருடமாக  நல்ல  பலன்கள்  கொடுக்கவில்லை , ஏனென்றால் ,ஏழரை  சனி  நடந்து கொண்டுஇருப்பதால் .தற்போது  ஜென்ம  சனி விலகும்  காலம் , இனி  நல்ல காலம் .  சனி பகவான்  16.12.2014 அன்று   பெயர்ச்சி  ஆகி , விருச்சிக ராசிக்கு  வருகிறார் . இது  ராசிக்கு  2ம் இடம்  , இது  நல்ல இடமில்லை . இருந்தாலும்  கடந்த  காலம்  நடந்த  கஷ்டங்கள்  இப்போது  நடக்காது .ஏழரை சனியின்  3ம் பாதம் , படிப்படியாக  கடன்  குறையும் . சுப நிகழ்சிகள் நடக்கும் . வம்பு  வழக்கு  முடிவுக்கு வரும் . நீதி  மன்றத்தில்  வழக்கு  இருந்தால்  அதுவும்  தங்களுக்கு  சாதகமாக தீர்ப்பு   வரும் .


சனி  பகவான் , குரு  பகவான்  நட்சத்திரமான  விசாகம்  சஞ்சரிக்கும்  பொழுது  குடும்பத்தில்  பணத்தட்டுப்பாடு  வரும் . மனைவிக்கு  மருத்துவ  செலவு  ஏற்படும் . வண்டி  வாகனங்களால்  விரயம் உண்டாகும் . இந்த காலக்கட்டங்களில்  கடன் வாங்கும்  சூழ்நிலை  ஏற்படும் .


சனி  பகவான்  தன் சொந்த நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும் பொழுது  , கடன்  சுமை  குறையும் . பணவரவு  ஏற்படும் . இடம்  சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு  வரும் . பிள்ளைகள் வெளிநாடு  வேலைக்கு  செல்ல  வாய்ப்பு  வரும் . தாயாரால்  பண  உதவி கிடைக்கும் . சொந்த தொழில்  செய்பவர்கள்  நல்ல முன்னேற்றம் அடைவார்கள் . அலுவலகத்தில்  பணி புரிபவர்கள்  பதவி  உயர்வுடைவார்கள் .


சனி பகவான் , தன  நட்பு  கிரகமான  புதனின்  கேட்டை  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் பொழுது , சுப  நிகழ்சிகள்  நடக்கும் . தந்தையால்  பண  உதவி  கிடைக்கும் . சொத்துக்களால்  லாபம் உண்டாகும் . வம்பு , வழக்கு  , முடிவுக்கு  வரும் .


மொத்தத்தில்  இந்த சனி  பெயர்ச்சி  கடந்த காலம்  இழந்ததை , சனி பகவான்  ஏழரை  சனி  முடியும்  காலம்  கொடுத்துவிட்டு  செல்வார் . இருந்தாலும்  அவ்வபொழுது  சின்ன , சின்ன , கஷ்டங்கள்  வரும் .ஏனென்றால்  ஏழரை சனி  முடிய  இன்னும்  இரண்டரை  ஆண்டுகள்  உள்ளன .


பரிகாரம் 


சனிகிழமை  விரதம்  இருந்து  , சனி பகவான் சன்னதியில்  தீபம்  ஏற்றி வழிபட்டு வரவும் . 


குறிப்பு  


தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள் 

கருத்துகள்