மேஷம்


சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை அஸ்வினி 4 பாதம் முடிய, பரணி 4 பாதம் முடிய , கிருத்திகை 1 பாதம் முடிய , பலன்கள் மதிப்பு 55%




சனி  பகவான்  மேஷ  ராசிக்கு  பகை பெற்றவர் . ராசிக்கு  பாதகதிபதி , மற்றும்   10ம்  இடம்  , 11ம்  இடத்துக்கு  உரியவர் .கடந்த  இரண்டரை  வருடம்  மாரக ஸ்தானமான  7ம்  இடத்தில் இருந்து  பல  கஷ்டங்களை  கொடுத்தார் . ஆனால் இந்த  ஜய  வருட  சனிபெயர்ச்சி  மேஷ  ராசிக்கு  அஷ்டம   சனியாக வருகிறார் . ஆனால்  மேஷ  ராசியை  சேர்ந்தவர்கள்   அஷ்டம சனியை  பார்த்து  பயப்பட தேவையில்லை . ஏன்  என்றால்  டிசம்பர்  16ந் தேதி  சனி பகவான்  பெயர்ச்சி  ஆகி  விருச்சிக  ராசிக்கு  வருகிறார் .  விருச்சிக  ராசியில்  உள்ள  சனி பகவானை  கடகத்தில்  உள்ள  உச்சம்  பெற்ற  குரு பகவான்  பார்வை  பெறுகிறார் . இதனால்  6 மாதம்  வரை  எந்த பிரச்சனை  வந்தாலும்  பாதிப்பு  ஏற்படாது . அதன்  பிறகு  1 வருடம்  குரு பகவான்  ராசிக்கு  5ம்  இடத்தில் அமர்ந்து  மேஷ  ராசிக்கு  ஏற்படும்  அஷ்டம  சனியின்  கஷ்டங்களை  இல்லாமல்  செய்வார் . மேஷ  ராசியை  சேர்ந்தவர்கள்  அஷ்டம சனியின்  தாக்கம்  1 வருடம்  மட்டும் தான்  சிரமமாக  இருக்கும் .



சனி பகவான் டிசம்பர்  16ந்த்   தேதி  முதல்  விசாகம்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் பொழுது, தந்தைக்கு  உடல் உபாதை , மருத்துவ  செலவு  ஏற்படுத்துவார் . தன 3ம் பார்வையாக   10ம் இடத்தை பார்ப்பதால் , தொழிலில்  சிரமங்களை  கொடுத்தாலும்  நஷ்டம்  ஏற்படாது .சந்திரனுக்கு  8ம் இடத்தில  சனி  இருப்பதால்  தாயுடன்  மன ஸ்தாபம்  ஏற்படும் . தொழில் ஸ்தானத்துக்கு  பாதகமான  இடத்தில  சனி  இருப்பதால்  லாபம்  எதிர்பார்க்க  முடியாது . 



சனி  பகவான்  தன  சொந்த  நட்சத்திரமான  அனுஷத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  சொந்த  தொழில் , மற்றும்  வேலையில் உள்ளவர்கள்  சிரமத்துக்கு  ஆளாவார்கள் . சனி பகவான்  7ம் பார்வையாக  2ம் இடத்தை  பார்ப்பதால்  பணத்தட்டுப்பாடு  ஏற்படும் . இதனால்  கடன் வாங்க  நேரிடும் .  10ம்  பார்வையால்  5ம் இடத்தை  பார்ப்பதால் , பூர்வீக  சொத்துக்களால்  பிரச்சனை  ஏற்படும் . மற்றும்  குழந்தைகளுக்கு  மருத்துவ  செலவு ஏற்படும் .



சனி  பகவான்  கேட்டை  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் பொழுது  , சகோதர  உறவு  பாதிக்க படும் . மற்றும்  கடன் கொடுத்தவர்கள்  பணம் கேட்டு  தொல்லைகள்  கொடுப்பார்கள் . தொண்டை  சம்பந்தமான  வியாதி வந்து  அகலும் .படிப்பில்  மாணவர்கள்  மந்த  நிலையை  அடைவார்கள் .



மேஷ  ராசிக்கு   இரண்டரை  வருடம்  அஷ்டம சனியில்  1 வருடம்  மட்டும்தான்  கஷ்டங்கள்  கடுமையாக  இருக்கும் . மீதி  ஒன்றரை  வருடம்  குருபகவானின்  அருளால்  நல்லதே  நடக்கும் .




பரிகாரம் 



அஷ்டம  சனி  ஆரமித்த  நாள்  முதல்  ஒவ்வொரு  சனிக்கிழமையும்  விரதமிருந்து , காகத்துக்கு  சாதம்  வைத்த பிறகு  மதிய  உணவு  அருந்தவும் .

கால பைரவருக்கு  நல்ல  எண்ணெய் தீபம்  ஏற்றி  வழிபடவும் .

கருத்துகள்