கடலில் 14 மாதங்களாக தத்தளித்த எல் சல்வடோரைச் சேர்ந்த ஜோஸ் என்ற நபர்
பசுபிக் சமுத்திரத்தின் மார்ஷல் தீவுக்கூட்டத்திலுள்ள ஒரு சிறிய
தீவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் அவரது
புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஜோஸ் என்ற மனிதரை 'பசுபிக்கின் மெராக்கள் மேன்" என
வர்ணிக்கப்பட்டுள்ளது. அதாவது பசுபிக்கின் அதிசய மனிதன் என்பது பொருள்.
அந்த நபரிடம் பயணத்தை பற்றி கேட்ட போது, அதைப்பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இல்லை. எனது சிந்தனையிலும் இல்லை என்று கூறியுள்ளார்.
அவர் மீட்கப்பட்டவுடன் நான் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஜோஸ் இவ்வாறு இருந்த காலத்தில் ஆமைகளின் இரத்தத்தைக் குடித்தும் மீன்களின் சதைகளை உண்டுமே உயிர் வாழ்ந்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.