உன்னால் முடியும் Part - 3

    
    அப்பொழுது தவளை கூறியது நான் குழியில் விழுந்து கதறினேன். அப்பொழுது மதிய வேளை வந்தது. எனக்கு மிகவும் பசி எடுத்து என்னால் தாங்க முடியாமல் மிகுந்த சத்தம் போட்டேன்.
அப்பொழுது எனது சத்தத்தை கேட்டு பாம்பு ஒன்று குழிக்குள் இறங்கி என்னை கடிக்க வந்தது. அப்பொழுது அது வாயை திறந்த நேரத்தில் அதன் கழுத்துப் பகுதியில் ஏறி விட்டேன் அது என்னை கீழே தள்ள உடம்பை ஆட்டியது. நான் மேலே துள்ளிக் குதித்து ஓடி விட்டேன் என்று கூறியது. 
     இதிலிருந்து நமக்கு தெரியும் கருத்து என்ன? நாம் கஷ்ட படும் போது யாரும் நம்மை சட்டை பண்ண மாட்டார்கள். அவனுக்கென்ன அவன் பண்ணின திமிருக்கு அவன் படுகிறான் என்று கூறி கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் யாராவது உதவி செய்வார்கள் என்று காத்திருக்காமல் நம் கையே நமக்கு உதவி என்று வாழ பழகிக்கொள்ளவேண்டும் . நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு உண்மையுடன் கூடிய உழைப்பும் இறை பக்தியும் இருந்தால் வாழ்வில் பல சாதனைகளை புரிய முடியும் என்பதில் ஐயமில்லை. சில சோதனைகள் வாழ்கையில் வர தான் செய்யும் அதனை சாதனையாக மாற்ற வேண்டும்.

                                                                                                                                               by
   நாளை...........                                                                                                                        V.P
              

கருத்துகள்