சகோதர பாசம்


ஒருவன் தன் சகோதரி, மனைவி, இரு குழந்தைகளுடன் பிழைப்பு தேடி, வேறு
ஒரு கிராமத்திற்குச்  செல்ல கால் நடையாக நடந்து வந்து கொண்டிருந்தான்.    அப்பொழுது வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. 

ஆற்றை கடப்பதற்கு அந்த ஊர் பக்கத்தில் பாலங்கள் எதுவும் இல்லாததால். ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும். வேறு வழி இல்லாமல் ஆற்றில் இறங்கி வந்து கொண்டு இருக்கும் பொழுது, ஆற்றில் திடீரென்று வெள்ளம் வந்து விட்டது. 

இவனால் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு கூடவே ஒரு நபரை மட்டுமே காப்பாற்ற முடியம் என்ற சூழ்நிலை, அவன் சற்றும் யோசிக்காமல் தன் சகோதரியை மட்டும் துக்கிக் கொண்டு ஆற்றின் அக்கறைக்குச் சென்று விட்டான். 

மனைவி,குழந்தைகளை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது அதனை பார்த்துக் கொண்டிருந்த வழிபோக்கர் ஒருவர் இவனிடம் சென்று ஐயா நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் மனைவியை காப்பாற்றி இருக்கலாம். அல்லது உங்கள் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். அவர்களையெல்லாம் விட்டு விட்டு இந்த  சகோதரியை கப்பாற்றியிருகிறீர்களே ஏன் என்று கேட்டார். 

அதற்கு அவர் சொன்ன பதில் என் மனைவி,குழந்தைகளை இழந்தால் இன்னொரு மனைவி கிடைப்பாள், பிள்ளைகளும் பிறக்கும். ஆனால் என் சகோதரியை இழந்தால் எனக்கு வேறு ஒரு சகோதரி இப்பிறப்பில் கிடைக்க மாட்டாள். அதனால் தான் சகோதரியை முதலில் காப்பாற்றினேன் என்றார். என்னே! சகோதரப் பாசம்.                                                                                                                                                                                                                                                                              by                                                                                                                                                                               V.P                   

கருத்துகள்