டென்ஷன் தவிர்ப்பது எப்படி?



டென்ஷன் ஏன் வருகிறது? எப்பொழுதெல்லாம் வருகிறது. எதற்காக வருகிறது? டென்ஷன் யாரால் வருகிறது? என்ன காரணத்தினால் வருகிறது.
அதை அல்லது அந்த நபரைத் தவிர்ப்பது? அதை விட முக்கியம் அந்த நபரை அல்லது அந்த காரணத்தைத் தவிர்த்துத்தான் ஆகவேண்டுமா? அல்லது take it easy என்று இருக்கலாமா பார்ப்போம்.

நாம் தினந்தோறும் வேலைக்குச் செல்கிறோம். காலையில் கிளம்புவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே, எவ்வளவு கஷ்டம் என்பது பெண்களுக்குத்தான் தெரியும். அதுவும் காலையில் ஒரு அரை மணி நேரம் தாமதமாக எழுந்து விட்டால் அவ்வளவுதான். அன்று நம் வீட்டில் உள்ள நபர்கள் எல்லோரும் நம்மிடம் திட்டு வாங்க வேண்டியதுதான். இந்த டென்சனைக் குறைப்பதற்காக நாம் வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியமா? முடியாது.

அப்படியானால்என்ன செய்யலாம். ஒரு மணி நேரம் முன்னதாகவே எழுந்து விட்டால் கண்டிப்பாக அந்த டென்சனிலிருந்து விடுபடலாம். என்றாவது ஒரு நாள் உடல் நலக்குறைவு காரணமாக தாமதமாக எழுந்தால் அதற்க்கேற்றார் போல் சமைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். இட்லி செய்வதற்குப் பதிலாக உப்புமா செய்யலாம். ப்ரெட் ஆம்ப்லேட் செய்யலாம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், குழந்தைகள் நாம் என்ன உணவு வகை செய்தாலும் சாப்பிடும்படி ஆரம்பத்திலிருந்தே பழக்கியிருக்க வேண்டும்.

by V.P
                                            மீண்டும் வரும் ............

கருத்துகள்