படகோட்டி


      ஒரு படகில் வேதியர் ஒருவர் ஏறினார். படகு சென்று கொண்டிருந்தது. 

அப்பொழுது  வேதியர்  படகோட்டியிடம், நீ ராமாயணம்  படித்திருக்கிறாயா? 

என்று  கேட்டார்.  அதற்கு  படகோட்டி  இல்லை   என்றார்.  அடடா   உன் 

வாழ்கையில் கால் பகுதியை இழந்து விட்டாயே என்றார்.
 

      அடுத்தது  சரி மகாபாரதமாவது படித்திருக்கிறாயா என்றார். அதற்கும்

படகோட்டி  இல்லை  என்றார்.  அடடா உன்  வாழ்கையில் பாதிப் பகுதியை 

இழந்து விட்டாயே என்றார். 

      சரி அது போகட்டும்  இந்துக்களின் புனித நூலான பகவத்கீதையாவது  

படித்திருக்கிறாயா என்றார்.  அதற்கும்  படகோட்டி இல்லை என்றார். அடடா 

உன்  வாழ்கையில் முக்கால் பகுதியை அல்லவா  இழந்து விட்டாய். என்றார். 

   இப்பொழுது படகோட்டி வேதியரிடம் கேட்டார். அய்யா உங்களுக்கு நீச்சல் 

தெரியுமா என்றார்.  தெரியாது என்றார்  வேதியர்.  அய்யா  நீங்கள் வாழ்வின் 

முழுப் பகுதியையுமே  இழந்து விட்டீர்கள். 

  படகில் ஓட்டை விழுந்து விட்டது.  ஏரி  நீர் படகில் ஏறிக்கொண்டிருக்கிறது. 

படகு  ஏரியில் முழ்கிவிடும்  என்றார்.  இதிலிருந்து  என்ன தெரிகிறது. உயிர் 

வாழ்வதற்குத்   தேவையான   அடிப்படை  விஷயங்கள்  கூட   தெரியாமல் 
 
எவ்வளவு தான்  அறிவாளியாக இருந்தும் என்ன  செய்வது, முதலில் உயிர்   

முக்கியம். அடுத்தது தான் மற்றவை.    

                                                                 by
                                                                   V.P

கருத்துகள்