உன்னால் முடியும் இறுதி பாகம்


              ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டும். இரண்டு கைகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

      
      குழந்தைகளை எப்படி தன்னம்பிக்கையுடன் வளர்க்கலாம்? மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. அதனை குழந்தைகள் செயல்படுத்தா விட்டால் அதற்காக குழந்தைகளை ஒவ்வொரு பெற்றோரும் என்ன பாடு படுத்துகிறோம். சரி நாமே விட்டாலும் நம்மை  சுற்றியிருப்போர்கள்  விடுவதில்லை என்ன மதிப்பெண் என்று கேட்டு அவர்கள் கொடுக்கின்ற Comment  இருக்கிறது பாருங்கள் அதுதான் மிகவும் கேவலமாக இருக்கும்.
     
         மதிப்பெண் ஒன்று தான் வாழ்க்கை இல்லை. 100% நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள். வாழ்க்கை என்ற பாடத்தில் 100%  மதிப்பெண் எத்தனை பேர் வாங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியுமா. அந்த குழந்தையின் மனதைப் பற்றிக் கவலைபடாமல் படி என்று பாடாய் படுத்தும் பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
     
             நானும் ஒரு பெற்றோர் தான். இருந்தாலும் கூட மதிப்பெண்களுக்காக மாணவர்களை கஷ்டப்படுத்துவதை, என்னால் சகிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் மாணவர்களை கஷ்டப்படுத்தினால் அவர்களிடம் தன்னம்பிக்கை எப்படி வளரும். தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.
     
                நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதில் தவறில்லை அதற்காக படிக்கா விட்டால் உனக்கு வாழ்கையே இல்லை என்று கூறக்கூடாது. அதனால் தான் மதிப்பெண் குறைந்து விட்டால் வாழ்கையே முடிந்து விட்டதாக கருதி மாணவர்கள் தவறான முடிவுக்கு வருகிறார்கள்.        
       
        பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்க நானும் என் அப்பாவும் பள்ளிக்கு சென்றோம். மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி பார்த்த எனது அப்பா கூறியது இந்த மதிப்பெண்கள் போதும்மா அடுத்து +2 ல் இதைவிட அதிக மதிப்பெண் வாங்க முயற்சிசெய் என்றார்கள்.
     
     எனது அப்பா அன்று எனக்கு கொடுத்த ஊக்கம்தான் +2ல் அதிக மதிப்பெண்கள் பெறமுடிந்தது. அடுத்து நான் ஆசிரியர் பயிற்சியில் சேரும் போது எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலை, குழந்தையை பிரிந்து இருந்து படிக்க முடியுமா என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. உன்னால் படிக்க முடியும் என  அன்று என் அப்பா கொடுத்த தைரியத்தில் தான் சரி என்றேன்.
             
               ஆனால் அங்கு குடும்பத்தை பிரிந்து நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். ஆனாலும் கூட என் அப்பாவின் முகம் தான் என் கண் முன்னே வரும். நம்மை நம்பி நம் அப்பா ஆசிரியர் பயிற்சியில் சேர்த்திருக்கிறார்கள். நாம் இடையில் படிப்பை நிறுத்தினால் நம் உறவினர்கள் எல்லோரும் நம் அப்பாவை குறை சொல்லுவார்களே என்ற காரணத்தினால் எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நன்றாகப் படித்து ஓர் ஆசிரியர் ஆனேன்.
             
    அன்று என் அப்பா எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கமலிருந்தால் இன்று நான் பொருளாதாரத்திலும் சரி சமூக அந்தஸ்திலும் சரி உயர்ந்திருக்கமுடியாது. என் அப்பா என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் என் அப்பா மேல் நான் வைத்திருந்த அன்பு கலந்த மரியாதையும் தான் என் வாழ்வை உயர்த்தியது என்றால் மிகையாகாது. என் அப்பா இன்று என் தெய்வமாக இருக்கிறார்கள்.                    

TRY  AND  TRY  AGAIN   SUCCEED  AT  LAST
                                                                                                                                                                                by
                                                                                                                                                                                    V.P


கருத்துகள்