ஒரு சிற்றுண்டியில் ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர், ஒரு இந்தியர் மூவரும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள், மூவரும் நண்பர்கள், உணவு கொண்டு வரும் வரை பொழுது போக அவர்கள் பேசிகொண்டிருந்தார்கள். அமெரிக்கர் சொன்னார் எங்கள் நாட்டில் விமானங்கள் எல்லாம் வானத்தை முட்டி கொண்டு செல்லும் என்றார். மற்ற இருவருக்கும் ஆச்சர்யம்! அது எப்படி வானத்தை முட்டிக் கொண்டு செல்லும் என்று ஆச்சர்யமாகக் கேட்டார்கள். உடனே அமெரிக்கர் சொன்னார் வானத்தை முட்டிக் கொண்டு என்றால் கொஞ்சம் வானத்திற்கு ஒரு அடி கீழே தான் என்றார்.
உடனே ரஷ்யர் தன் நாட்டு பெருமையைக் கூற வேண்டுமே என்று அவர் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னார் எங்கள் நாட்டில், நீர் மூழ்கிக் கப்பல்கள் கடலில் தரையை தட்டிக் கொண்டு செல்லும் என்றார். உடனே அமெரிக்கரும், இந்தியரும் அது எப்படி என ஆச்சர்யமாகக் கேட்டார்கள். உடனே ரஷ்யர் சொன்னார். கடலில் தரையை தட்டிக் கொண்டு என்றால், கொஞ்சம் ஒரு அடி மேலே தான் என்றார்.
இப்பொழுது இந்தியருக்குத் தன் நாட்டுப் பெருமையை கட்டாயம். சொல்லியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே இந்தியர் சொன்னார். நாங்கள் எல்லோரும் மூக்கால் தான் சாப்பிடுவோம் என்றார். அதனை கேட்ட அமெரிக்கருக்கும், ரஷ்யருக்கும் ஆச்சர்யம். மூக்கால் எப்படி சாப்பிட முடியம் என வியப்பாகக் கேட்டார்கள். உடனே இந்தியர் சொன்னார். மூக்கால் என்றால் ஒரு இஞ்ச் கீழே தான் என்று கூலாகச் சொன்னார்.
by
V,P 
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.