கவிதை
வேண்டும்! வேண்டும்!
அன்பான உள்ளம் வேண்டும்.
ஆசையில்லா நெஞ்சம் வேண்டும்.
இனிமையான வாழ்க்கை வேண்டும்.
ஈட்டிய செல்வத்தை காத்திடல் வேண்டும்.
உண்மையாய் உழைத்திடல் வேண்டும்.
ஊர்புகழ வாழ்ந்திடல் வேண்டும்.
எண்ணம் நல்லது வேண்டும்.
ஏளனம் செய்வோரை ஒதுக்க வேண்டும்.
ஐம்புலன்களை அடக்கி ஆளவேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாரக மந்திரத்தோடு
ஓம் நமசிவாய என்ற மந்திரத்தையும் உச்சரித்தால்
வாழ்வில் வேண்டும் முன்னேற்றம் என்றும் உண்டு.
by
V.P

இது போல் நிறைய கவிதை எழுதவும்.
பதிலளிநீக்கு